search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் மீண்டும் பரவுகிறது
    X

    தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் மீண்டும் பரவுகிறது

    தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் மீண்டும் பரவுவதால் அதை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். #Swineflu #fever

    சென்னை:

    தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் பன்றிக்காய்ச்சல் பரவியது. இதில் பலர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    பன்றிக்காய்ச்சலால் உயிரிழப்பும் ஏற்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால் பன்றிக்காய்ச்சல் ஓரளவுக்குத்தான் கட்டுப்படுத்தப்பட்டது. அதன் பாதிப்பு கடந்த ஆண்டு இறுதி வரை இருந்தது.

    இந்த நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவ தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 1-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 48 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது.

    இதையடுத்து பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுத்து வருகிறார்கள்.

    இதுகுறித்து பொது சுகாதார இயக்குனர் குழந்தைசாமி கூறுகையில், “தமிழகத்தில் பன்றி காயச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். தினமும் சிகிச்சைகக்காக ஒன்று அல்லது 2 பேர் வருகின்றனர். மதுரையில் பன்றி காய்ச்சல் பாதிப்பு உள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் யாரும் இல்லை” என்றார்.

    நாட்டிலேயே இந்த ஆண்டு தொடக்கத்திலேயே ராஜஸ்தானில் அதிக பட்சமாக பன்றிக்காய்ச்சலுக்கு 780 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 31 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.

    இதேபோல் குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களிலும் பன்றிக்காய்ச்சலுக்கு பலர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். #Swineflu #fever

    Next Story
    ×