search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் இட்டேரி ரோட்டில் பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து
    X

    சேலம் இட்டேரி ரோட்டில் பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

    சேலம் நெத்திமேடு அருகே இட்டேரி ரோட்டில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீயை அரை மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
    சேலம்:

    சேலம் நெத்திமேடு அருகே உள்ள இட்டேரி ரோட்டில் ஒரு பழைய பிளாஸ்டிக் குடோன் உள்ளது.

    அந்த பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் பழைய பிளாஸ்டிக் மற்றும் பழைய பாட்டில்களை அந்த குடோனில் சேகரித்து வைத்து மொத்தமாக விற்பனை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்றிரவு 11 மணியளவில் அந்த குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த அந்த பகுதியினர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து வந்த செந்தில்குமார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றனர். மேலும் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அருகில் செல்ல முடியவில்லை.

    இதனால் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பழைய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தீ விபத்து நடந்த இடம் முன்னாள் எம்.எல்.ஏ. நடேசனுக்கு சொந்தமானது. செந்தில்குமாருக்கு அந்த இடத்தை நடேசன் வாடகைக்கு கொடுத்துள்ளார்.
    Next Story
    ×