search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதாவுடன் கூட்டணி என்று நாங்கள் சொல்லவில்லை - பொன்னையன்
    X

    பா.ஜனதாவுடன் கூட்டணி என்று நாங்கள் சொல்லவில்லை - பொன்னையன்

    பா.ஜனதாவுடன் கூட்டணி என்று நாங்கள் சொல்லவில்லை என்று அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பொன்னையன் கூறியுள்ளார். #ADMK #BJP #Ponnaiyan

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் கூட்டணி குறித்து வியூகம் வகுத்து வருகிறது.

    இதில் அ.தி.மு.க.வுடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைக்குமா? அல்லது அ.தி.மு.க. தனித்து களம் இறங்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுபற்றி அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பொன்னையனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வேண்டும் என்று எங்கள் கட்சியில் யாரும் சொல்லவில்லை. எங்களை பொறுத்தவரை அம்மா வகுத்து தந்த கொள்கைப்படி செயலாற்றுவோம்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து நின்று அமோக வெற்றி பெற்றது. அதே போல் இந்த தேர்தலிலும் வெற்றி பெற அ.தி.மு.க. தொண்டர்கள் தேர்தல் பணியை துவக்கி விட்டனர்.

    ‘பூத்’ வாரியாக நிர்வாகிகளை நியமித்து பணியாற்றி வருகிறோம். தமிழகத்தை மதிக்கிற ஆட்சி மத்தியில் வேண்டுமானால் அ.தி.மு..க.வுக்கு ஓட்டு போடுங்கள் என்று பிரசாரம் செய்வோம். யார் பிரதமர் என்பது அப்புறம்தான்.

    பாரதிய ஜனதாவை காவி கட்சி, மதவாதம் என்று தி.மு.க. கூறுகிறது. எதிர்க்கிறது. இதே தி.மு.க. வாஜ்பாய் அமைச்சரவையில் பல முக்கிய இலாக்காவை பெற்று அமைச்சர் பதவி சுகம் அனுபவித்தது.

    எனவே கூட்டணி என்பது அரசியலில் அவ்வப்போது மாறிக்கொண்டேதான் உள்ளது. எங்களை பொறுத்தவரை பிரதமர் யார் என்று சொல்லித்தான் ஓட்டு கேட்க வேண்டிய நிலையில் நாங்கள் இல்லை.

    மக்கள் பிரச்சினைக்காக பாடுபடும் கட்சி அ.தி.மு.க. அதனால் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #BJP #Ponnaiyan

    Next Story
    ×