search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரு தொகுதியில் கூட அதிமுக டெபாசிட் வாங்காது- தினகரன் பேச்சு
    X

    ஒரு தொகுதியில் கூட அதிமுக டெபாசிட் வாங்காது- தினகரன் பேச்சு

    பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட அ.தி.மு.க.வால் டெபாசிட் வாங்க முடியாது என்று பாலக்கோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசினார். #AMMK #TTVDhinakaran #ADMK #EdappadiPalaniswami
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் பேசியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சி 331 பேருக்கு மட்டுமே நடந்து வருகிறது. அவர்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும், எடப்பாடி ஆதரவாளர்களுக்கும்தான் இந்த ஆட்சி நடக்கிறது. 2 ஆண்டுகள் ஆட்சி நீடித்ததை சாணக்கிய தனம், எடப்பாடி பழனிசாமியின் ராஜதந்திரம் என்று கூறி வருகிறார்கள். இது உண்மை அல்ல. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்ட வழக்கினால்தான் இந்த ஆட்சி நீடித்து வந்தது. இனிமேல் இந்த ஆட்சி நீடிக்காது.

    திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தலை அறிவித்தனர். ஆனால் கடந்த டிசம்பர் மாதமே தலைமை செயலாளர் தேர்தல் வேண்டாம் என்று தேர்தல் கமி‌ஷனுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அ.தி.மு.க. வேட்பாளரையும் அறிவிக்காமல் விட்டனர். ஆனால் தேர்தலை சந்திக்க தயார் என்று அ.தி.மு.க. அமைச்சர்கள் வாய் ஜாலம் காட்டினர். ஒருபக்கம் தேர்தலை நிறுத்த சொல்லிவிட்டு மறுபக்கம் தேர்தலை சந்திக்க தயார் என்று மக்களிடம் நடித்து காட்டினர்.


    20 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த தேர்தல் கமி‌ஷன் மட்டுமல்ல அ.தி.மு.க.வும் பயப்படுகிறது. பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட அ.தி.மு.க. வெற்றி பெறாது. ஓட்டுக்கு ரூ. 10 ஆயிரம் கொடுத்தால் கூட அ.தி.மு.க டெபாசிட் வாங்க முடியாது. ஆர்.கே. நகர் தேர்தலில் டெபாசிட் வாங்காத மிகப்பழமையான கட்சியின் நாயகன் திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை அறிவித்தார். ஆனால் இன்னொரு பக்கம் தனது பிரதிநிதியை அனுப்பி அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் வேண்டாம் என்று சொல்கிறார். அவருடைய அப்பா திருவாரூர் தொகுதியில் 63 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் திருவாரூரில் தேர்தல் நடந்தால் ஆர்.கே நகர் போல திருவாரூரிலும் தி.மு.க. டெபாசிட் வாங்குவது சந்தேகம்தான். 20 தொகுதி தேர்தல் நடந்தால் அ.ம.மு.க. வெற்றி பெறும். மற்ற கட்சிகள் டெபாசிட் இழக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். #AMMK #TTVDhinakaran #ADMK #EdappadiPalaniswami
    Next Story
    ×