search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி இடத்திற்கு ராகுல் வரவேண்டும்- குமரி அனந்தன் பேட்டி
    X

    பிரதமர் மோடி இடத்திற்கு ராகுல் வரவேண்டும்- குமரி அனந்தன் பேட்டி

    எல்லா துறைகளிலும் பா.ஜ.க. அரசு பின்தங்கிவிட்டதால் பிரதமர் மோடி இடத்திற்கு ராகுல் காந்தி வரவேண்டும் என்று குமரி அனந்தன் தெரிவித்துள்ளார். #kumariananthan #pmmodi #rahulgandhi

    நெல்லை:

    சுகந்திர போராட்ட தியாகி சோமாயாசலு 29-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படதிறப்பு விழா நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் கலந்து கொண்டு படத்தை திறந்து வைத்து மாலை மணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட தலைவர்கள் சங்கரபாண்டியன், எஸ்கேஎம். சிவக்குமார், பழனிநாடார் ஆகயோர் செய்திருந்தனர்.

    பின்னர் குமரி அனந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுதந்திரத்திற்காக போராடிய தியாகி சோமாயாசலு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தார். அவரை நினைவு கூறும் வகையில் நெல்லை, பாளை பகுதியில் அவருக்கு சிலை அமைக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் தலையாய கொள்ளை மதுவிலக்குதான். அதற்காக காங்கிரஸ் தொடர்ந்து போராடும். கள்ளுக்கடை, சாராயக்கடைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும். அரசு சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி தேசிய நெடுஞ்சாலைகளில் கடைகள் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது.


    இந்த ஆட்சி மாற வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். தேர்தல் மூலம் இதை மக்கள் முடிவு செய்வார்கள். எல்லா துறைகளிலும் மோடி அரசு பின்தங்கிவிட்டது. வேலை வாய்ப்பு கொடுக்கவில்லை. தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. இந்த நிலை மாற பிரதமர் மோடி இடத்திற்கு ராகுல்காந்தி வர வேண்டும். அப்போது தான் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த முடியும். வேலை வாய்ப்புகள் கொடுக்க முடியும் இமயத்தில் ஓடும் நதிகள் குமரி கடலில் கலக்கும் வகையில் நதிகளை இணைக்க வேண்டும். இந்த வழியாக நீர்வழிப்பாதை அமைக்க வேண்டும். 8 வழிச்சாலை,

    தொழிற்சாலைகளுக்காக விவசாய நிலங்களை அழிக்க கூடாது. தரிசு நிலங்களில் அமையும் வகையில் செயல்படுத்த வேண்டும். ஸ்டெர்லைட் தொழிற்சாலை விவகாரத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த ஆலையை நிரந்தரமா மூட வேண்டும். தமிழக காங்கிரஸ் தேர்தலுக்கு தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #kumariananthan #pmmodi #rahulgandhi

    Next Story
    ×