search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெருக்கடி நிலையில் நீதித்துறை இருப்பதாக அறிவிக்க நேரிடும்- ஐகோர்ட் எச்சரிக்கை
    X

    நெருக்கடி நிலையில் நீதித்துறை இருப்பதாக அறிவிக்க நேரிடும்- ஐகோர்ட் எச்சரிக்கை

    நெருக்கடி நிலையில் நீதித்துறை இருப்பதாக அறிவிக்க நேரிடும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #HighCourt #TNGovt
    சென்னை:

    சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. ஏற்கனவே நேற்று முன்தினம் வழக்கு விசாரணை நடந்தபோது, ஆஜரான மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், ‘‘கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகம் பூட்டு போடப்பட்டுள்ளது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் வழக்கை விசாரணை அதிகாரி குமார் விசாரித்து வருகிறார். ஆனால், அவர் தன்னுடைய பணியை கவனிக்காமல், டிஜிபி அலுவலகத்தில் பேட்டியளித்துக் கொண்டிருக்கிறார்’’ என்று குற்றம்சாட்டினார்.

    இதேபோல் நீதிமன்றம் உத்தரவிட்டும் கிண்டியில் தன்னுடைய அலுவலகத்தைப் பயன்படுத்த முடியாமல் தெருவில் நிற்பதாக சிலை கடத்தல் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் குற்றம்சாட்டினார்.

    பொன். மாணிக்கவேலின் குற்றச்சாட்டுக்களை அடுத்து, தமிழக அரசு நீதிமன்ற உத்தரவை முற்றிலும் மீறுவதாக கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலை தொடர்ந்தால், தலைமை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும் எச்சரித்தனர்.


    மேலும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன். மாணிக்கவேலுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால், காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய நேரிடும் என்று எச்சரித்து வழக்கு விசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது.

    இந்நிலையில், இன்று மீண்டும் நடந்த விசாரணையில், தனக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று பொன். மாணிக்கவேல் குற்றம்சாட்டினார். பின்னர் கூறிய நீதிபதிகள், ‘‘சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை மாநில அரசு கையாளும் விதத்தைப் பார்க்கும்போது, நீதித்துறை நெருக்கடியில் இருப்பதாக தோன்றுகிறது. சிலை கடத்தல் வழக்கு தொடரப்பட்டத்தில் இருந்து அரசின் செயல்பாடுகள் முறையாக இல்லை’’ என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

    ஓய்வு பெற்ற ஒருவர் டிஜிபியாக தொடரும் நிலையில் சிறப்பு அதிகாரியை நியமிக்கக் கூடாதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கை வரும் 21-ம்தேதிக்கு ஒத்தி வைத்தனர். #HighCourt #TNGovt
    Next Story
    ×