search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாட்டுவண்டி தொழிலாளர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட 10 பேர் கொண்ட கும்பல் கைது
    X

    மாட்டுவண்டி தொழிலாளர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட 10 பேர் கொண்ட கும்பல் கைது

    மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய வேட்டையாடும் கும்பல் 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள வீரமூர் ஏரிக்கு கடந்த 30-ந் தேதி அதிகாலை மண் அள்ளுவதற்காக மாட்டு வண்டிகளில் சென்ற தொழிலாளர்களை நோக்கி மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இதில் ஒரு மாட்டின் வாய் பகுதியில் குண்டு பாய்ந்ததில் நாக்கு துண்டானது. துப்பாக்கியால் சுட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று மாட்டு வண்டி தொழிலாளர்கள் மறியல் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரின் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் மற்றும் கெடார் போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    காட்டுப்பன்றிகளை வேட்டையாட வந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டார்களா? அல்லது கீழ்வாலை ஏரியில் மண் அள்ளுவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக யாரேனும் துப்பாக்கியால் சுட்டார்களா? அல்லது பெங்களூருவை சேர்ந்த சிலை கடத்தல் கும்பல் இந்த செயலில் ஈடுபட்டனரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்று பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரித்தனர்.

    இந்நிலையில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது வேட்டையாடும் கும்பல் என்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் புதுவையில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் புதுவை விரைந்து சென்று திருக்கனூரை சேர்ந்த வாலிபர் உள்பட 6 பேரையும், விழுப்புரத்தை சேர்ந்த 4 பேரையும் போலீசார் இன்று கைது செய்தனர்.

    கைதானவர்களை விழுப்புரத்து போலீசார் அழைத்து சென்றனர். அங்கு ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×