search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2 நாள் வேலை நிறுத்த போராட்டம் - கேரளா செல்லும் பஸ்கள் களியக்காவிளையில் நிறுத்தம்
    X

    2 நாள் வேலை நிறுத்த போராட்டம் - கேரளா செல்லும் பஸ்கள் களியக்காவிளையில் நிறுத்தம்

    10 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை யொட்டி கேரளா செல்லும் பஸ்கள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டது.
    நாகர்கோவில்:

    நாடு முழுவதும் 10 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் சி.ஐ.டி.யூ. உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று பணிக்கு செல்லவில்லை. இருப்பினும் பஸ்களை இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள ராணித்தோட்டம், கன்னியாகுமரி விவேகானந்தபுரம், திருவட்டார் உள்பட 12 டெப்போக்களில் இருந்தும் இன்று காலை பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. டெப்போக்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து கிராமங்களுக்கும் மதுரை, நெல்லை போன்ற வெளியூர்களுக்கும் பஸ்கள் வழக்கம்போல் ஓடியது.

    திருவனந்தபுரம் செல்லும் பஸ்கள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டது. கேரளாவில் இருந்தும் பஸ்கள் குமரி மாவட்டத்திற்கு இயக்கப்படவில்லை. இதனால் கேரளா செல்லும் ரெயில்களில் கூட்டம் அலைமோதியது.

    வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம், களியக்காவிளை பஸ் நிலையம், கன்னியாகுமரி பஸ் நிலையம் உள்பட அனைத்து பஸ் நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. #tamilnews
    Next Story
    ×