search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.2 ஆயிரம், ரூ.200 கள்ளநோட்டுகள் மாற்ற முயற்சி - 3 தொழிலாளிகள் கைது
    X

    ரூ.2 ஆயிரம், ரூ.200 கள்ளநோட்டுகள் மாற்ற முயற்சி - 3 தொழிலாளிகள் கைது

    ஆலங்குளம் அருகே ரூ.2 ஆயிரம், ரூ.200 கள்ளநோட்டுகள் மாற்ற முயற்சி செய்த 3 தொழிலாளிகளை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலையில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்து, ரூ.100-க்கு பெட்ரோல் போட்டனர். பின்னர் அவர்கள் 200 ரூபாய் நோட்டை கொடுத்து மீதி சில்லறை கேட்டனர். அந்த 200 ரூபாய் நோட்டை பார்த்த ஊழியருக்கு அது கள்ளநோட்டு போல் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் கூறினார். அவர் அந்த நோட்டை பரிசோதித்து பார்த்த போது அது கள்ள நோட்டு என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பெட்ரோல் பங்க் உரிமையாளரான செல்வகிருஷ்ண மோனிஷா (வயது23) என்பவர் ஊத்துமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பெட்ரோல் போட வந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் மேலும் ஒரு 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு இருந்தது தெரியவந்தது. அதையும் பறிமுதல் செய்தனர்.

    இந்த கள்ளநோட்டு எப்படி வந்தது என்று அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்கள். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் பெயர் விபரம் வருமாறு:-

    1.ராஜா (30) குலையநேரி, 2.முத்துகிருஷ்ணன் (32) குலையநேரி, 3.செல்லப்பாண்டி (55) கம்மாவூர். இவர்களிடம் ஊத்துமலை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×