search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சப்பாணி குதிரையை களமிறக்க அ.தி.மு.க. தயாராக இல்லை - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சொல்கிறார்
    X

    சப்பாணி குதிரையை களமிறக்க அ.தி.மு.க. தயாராக இல்லை - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சொல்கிறார்

    திருவாரூர் இடைத் தேர்தலில் சப்பாணி குதிரையை களமிறக்க அ.தி.மு.க. தயாராக இல்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். #அதிமுக #ராஜேந்திரபாலாஜி #ADMK #MinisterRajendraBalaji
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    திருவாரூர் இடைத் தேர்தல் வருகிற 28-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் தேர்தலில் இறங்கின. தி.மு.க. வேட்பாளராக திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணனும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக காமராஜும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    ஆளும் கட்சியான அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பில் காலதாமதம் செய்து வருகிறது. இது குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:-

    தினகரன் அணி சிறு குழந்தை. அ.தி.மு.க. 46 ஆண்டு முடிந்த ஒரு இளைஞர். தினகரன் கட்சியை கண்டு நாங்கள் பயப்படமாட்டோம். அ.தி.மு.க.வை பார்த்து தான் பிற கட்சிகள் பயப்படுகின்றன.

    அகில இந்திய அளவில் நாடாளுமன்ற தேர்தலை நிர்ணயிக்கும் கட்சியாக அ.தி.மு.க. இருக்கும். அ.தி. மு.க. மிகப் பெரிய இயக்கம். எந்த தேர்தலையும் பார்த்து பயப்படாது.

    திருவாரூர் இடைத் தேர்தலில் பந்தய குதிரையை விடும்போது நல்ல குதிரையா, ஓடும் குதிரையா என பார்த்து தான் விட வேண்டும். சப்பாணி குதிரையை யார் வேண்டுமானாலும் இறக்கி விடலாம். சரியான நேரத்தில் வேட்பாளரை களம் இறக்குவோம்.

    வேட்பாளர் அறிவிப்பில் எடப்பாடி-ஓ.பி.எஸ். இடையே கருத்து வேறுபாடு இல்லை. இருவரும் இரட்டை குழல் துப்பாக்கியாக ஒன்றாகத்தான் உள்ளனர்.

    அ.தி.மு.க. தலைமையை ஏற்கும் கட்சிதான் தமிழகத்தில் ஜெயிக்கும். இந்த கூட்டணிதான் மத்தியில் ஆட்சியை நிர்ணயிக்கும். தேர்தல் குறித்து பா.ஜனதா -அ.தி.மு.க. பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. பேச்சு வார்த்தை உள்ளது என்றால் அ.தி.மு.க. எம்.பி.க்களை ஏன் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். பா.ஜனதா விற்கும் அ.தி.மு.க.விற்கும் எந்த உறவும், தொடர்பும் கிடையாது.

    அ.தி.மு.க. வேறு, பா.ஜனதா வேறு. தேர்தல் கூட்டணி குறித்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவோம்.

    திருவாரூர் இடைத் தேர்தலில் கமல்ஹாசன் போட்டி இல்லை என அறிவித்துள்ளார். அவரது கட்சிக்கு அங்கு வேட்பாளரே இல்லை, கமல் எந்த தேர்தலிலும் போட்டியிடமாட்டார். கவுன்சிலர் தேர்தலில் கூட நிற்க முடியாது. கமலஹாசன் செயற்குழு பொதுக்குழுவில் 15 பேர் மட்டுமே உள்ளனர்.

    அ.தி.மு.க.வுக்கு நிகராக இந்திய அளவில் எந்த கட்சியும் இல்லை. சபரிமலை தரிசனத்துக்கு பெண்கள் செல்வதை தவிர்க்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #அதிமுக #ராஜேந்திரபாலாஜி  #ADMK #MinisterRajendraBalaji
    Next Story
    ×