search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகரில் இன்று காலை அரசு-மினி பஸ் டிரைவர்கள் மோதல்- பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பரபரப்பு
    X

    விருதுநகரில் இன்று காலை அரசு-மினி பஸ் டிரைவர்கள் மோதல்- பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பரபரப்பு

    அரசு பஸ் டிரைவருக்கும் மினி பஸ் டிரைவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. இதனால் பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    விருதுநகர்:

    விருதுநகர் பஸ் நிலையம் இன்று காலை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நேரத்தில் வெல்லமநாயக்கன்பட்டி செல்லும் அரசு பஸ் வந்தது. அந்த நேரத்தில் விருது நகர்- சத்திரரெட்டிபட்டி செல்லும் மினி பஸ்சும் வந்தது.

    இந்த பஸ்கள் புறப்படும் நேரம் தொடர்பாக மினி பஸ் டிரைவர் மாரியப்பன், அரசு பஸ் டிரைவர் ராஜா ஆகியோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மினி பஸ் டிரைவருக்கு ஆதரவாக ஊழியர்களும் வர கைகலப்பு ஏற்பட்டது.

    அந்த நேரத்தில் அங்கு விருதுநகர் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் வந்தார். அவர் 2 டிரைவர்கள் மற்றும் ஊழியர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றார்.

    இந்த தகவல் வேகமாக பரவ, அரசு பஸ்களை ஊழியர்கள் ஆங்காங்கே நிறுத்தினர். இதனால் பஸ் நிலையத்திற்குள் குறுக்கும் நெருக்குமாக பஸ்கள் நின்றதால் பதட்டம் ஏற் பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அரசு போக்குவரத்து கழகத்தினர் போலீஸ் நிலையம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பஸ் டிரைவர்கள் போராட்டம் காரணமாக சுமார் ¾ மணி நேரம் விருதுநகர் பஸ் நிலையம் பதட்டமாக காணப்பட்டது.

    Next Story
    ×