search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் - டாஸ்மாக் கடைகளில் ரூ.5 கோடிக்கு மது விற்பனை
    X

    மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் - டாஸ்மாக் கடைகளில் ரூ.5 கோடிக்கு மது விற்பனை

    சேலம் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.5 கோடியே 95 லட்சத்துக்கு மதுவிற்பனை நடைபெற்றது. இந்த விற்பனை கடந்த ஆண்டை விட ரூ.99¾ லட்சம் அதிகம் ஆகும்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 2019-ம் புத்தாண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு கொண்டாடப்பட்டது. அதே நேரத்தில் புத்தாண்டை கொண்டாட, மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடையை நோக்கி படையெடுத்தனர். இதனால் கடைகளில் மாலை நேரத்தில் இருந்து கடை அடைக்கும் நேரம் வரை கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    மதுப்பிரியர்கள் தங்களது விருப்பமான மதுவகைகளை வாங்கி நண்பர்களுடன் அருந்தி புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடிவிடுவார்கள் என்பதால் ஒரு சிலர் கூடுதலாக மதுவகைகளை வாங்கி நள்ளிரவு 12 மணிக்கு மது அருந்தினர்.

    இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:-

    மாவட்டத்தில் 204 டாஸ்மாக் மதுபானக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு பண்டிகை காலங்கள் மற்றும் திருமண நாட்களில் மது விற்பனை அதிகமாக இருக்கும். புத்தாண்டு பிறப்பு என்பதால் டாஸ்மாக் கடைகளில் விற்பனை வழக்கத்தை விட கூடுதலாக மது விற்பனை இருந்தது.

    நேற்று முன்தினம் ஒரே நாளில் பிராந்தி வகை 9 ஆயிரத்து 204 பெட்டியும், பீர் வகை 6 ஆயிரத்து 401 பெட்டியும் விற்பனையானது. இதன் மதிப்பு ரூ.5 கோடியே 95 லட்சத்து 24 ஆயிரத்து 420 ஆகும். மேலும் கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, டாஸ்மாக் கடைகளில் ரூ.4 கோடியே 95 லட்சத்து 40 ஆயிரத்து 112-க்கு மதுவிற்பனை நடைபெற்றது. இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக ரூ.99 லட்சத்து 84 ஆயிரத்து 308-க்கு மதுவிற்பனை நடைபெற்றது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×