search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாட்டி வதைத்த கடும் பனி
    X

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாட்டி வதைத்த கடும் பனி

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளுக்குநாள் குளிர் அதிகரித்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து வருகிறது.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் தொடர்ந்து சில நாட்களாக பனி வாட்டி வதைத்து வருகிறது.

    போச்சம்பள்ளி பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பனி மூட்டம் மற்றும் குளிர் மாறி, மாறி வந்தநிலையில் இன்று காலை சுமார் 16 டிகிரி அளவில் போச்சம்பள்ளி பகுதிகளில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் சாலை ஓரத்தில் இருக்கும் குப்பைகளை வைத்து நேருப்பூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். போச்சம்பள்ளி பகுதிகளில் பெரும்பாலும், நீர் நிலைகள் மற்றும் தென்னந்தோப்புகள் இருப்பதால் கடுமையான குளிர்ஏற்பட்டு சீதோஷ்ண நிலை மாறி உள்ளதால் பொதுமக்களுக்கு கடந்த ஒரு மாதம் சளி, ஜொரம் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற குவிந்து வருகின்றன.

    சூளகிரி சுற்றுவட்டார பகுதியில் நாளுக்குநாள் குளிர் அதிகரித்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து வருகிறது.

    இரவு 12 மணி முதல் காலை 10 மணி வரை அதிக குளிர் நிலவி வருவதால் அதிகாலை 4, 5 மணிக்கு திறக்கப்படும் டீகடை, காய்கறி கடை, மளிகை கடை வியாபாரிகள் தாமதமாக தங்கள் கடைகளை திறந்து, வேலைகளை செய்து வருகின்றனர். கடும்குளிர் என்பதால் சொட்டர், குல்லா, அணிந்து செல்கின்றனர். கால், கைகள் மறைக்கப்படாத பகுதியில் குளிரினால் விரைப்பு ஏற்பட்டு வாகனம்கூட இயக்க முடியவில்லை எனவும், வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பெரும் அவதிபட்டு வருகின்றனர்.

    மேலும், சூளகிரி பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவும் இந்தது.

    சூளகிரி சந்தை வீதியில் புதன்கிழமைதோறும் கோழி, ஆடுசந்தை நடைபெறுவது வழக்கம். அதிகாலை 5 மணிக்கே கூடும் இந்த சந்தை இன்று கடும் பனியின் காரணமாக காலை 8 மணிக்கு பிறகு தான் கூடியது. எனவே தாமதமாக கோழிகள், ஆடுகள் கொண்டு வரப்பட்டன. #tamilnews
    Next Story
    ×