search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் அருகே சிவலிங்கம் சேதம்-நந்தி சிலை மாயம்- 31 பேர் மீது வழக்கு
    X

    திருவள்ளூர் அருகே சிவலிங்கம் சேதம்-நந்தி சிலை மாயம்- 31 பேர் மீது வழக்கு

    திருவள்ளூர் அருகே எல்லையம்மன் கோயில் அருகே சிவலிங்கம் உடைக்கப்பட்டிருந்ததுடன், நந்தி சிலையும் மாயமாகி இருந்தது. சிலையை சேதப்படுத்தியோரை கைது செய்ய கோரி மறியலில் ஈடுபட்ட 31 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த மேல்நல்லாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நுங்கம்பாக்கம் கிராமத்தில் எல்லையம்மன் கோயில் உள்ளது.

    இந்த கோவில் அருகே சர்வதீர்த்த குளக்கரையில் பழமை வாய்ந்த அஷ்டலிங்கம், நந்தி சிலை வைத்து பக்தர்கள் வழிபாடு செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து நேற்று காலை அஷ்டலிங்கத்தின் சிலை உடைக்கப்பட்டிருந்ததுடன், நந்தி சிலையும் மாயமாகி இருந்தது.

    இதையடுத்து, அஷ்டலிங்க சிலையை சேதப்படுத்தியோரை கைது செய்து, மாயமான நந்தி சிலையை மீட்டுத்தர வலியுறுத்தி திருவள்ளூர் மேற்கு மாவட்ட இந்து முன்னணி தலைவர் வினோத் கண்ணன் தலைமையில் ஏராளமானோர் திருவள்ளூர் -ஸ்ரீபெரும்புதூர் சாலையில் திடீரென ஆர்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மேற்கு மாவட்ட இந்து முன்னணி தலைவர் வினோத் கண்ணன் மற்றும் 10 பெண்கள் உள்பட 31 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    மாயமான நந்தி சிலையை மர்ம நபர்கள் அருகில் உள்ள குளத்தில் வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதில் தேடி வருகின்றனர். மேலும் சிலையை சேதப்படுத்தியவர்கள் குறித்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×