search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரதம் இருந்த 36 ஆசிரியர்கள் மயக்கம்
    X

    ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரதம் இருந்த 36 ஆசிரியர்கள் மயக்கம்

    சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரம் இருந்த இடைநிலை ஆசிரியர்களில் 36 பேர் மயக்கமடைந்தனர். #TeacherProtest
    சென்னை:

    தமிழக அரசு பள்ளிகளில் 2009-ம் ஆண்டு மே 31-ந் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதன் பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் இடையே ஊதிய முரண்பாடு காணப்படுகிறது.

    சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டி.பி.ஐ. வளாகம் முன்பு நேற்று முன்தினம் போராட்டத்தை தொடங்கினார்கள். அவர்களை போலீசார் கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்க வைத்தனர்.



    அங்கு அவர்கள் நேற்று 2-வது நாளாக போராட்டம் நடத்தினார்கள். நேற்று 30 ஆசிரியர்கள் அடுத்தத்தடுத்து மயக்கம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    நேற்று இரவு முதல் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இன்று 3-வது நாளாக அவர்கள் போராட்டம் நீடித்தது. போராட்டம் நடத்திய ஆசிரியர்களில் இன்று மேலும் 6 பேர் மயக்கம் அடைந்தனர். மொத்தம் 36 பேர் மயக்கம் அடைந்துள்ளனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மற்ற ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அரையாண்டு தேர்வு முடிந்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் மாணவர்களின் வினாத்தாள்களை ஆசிரியர்கள் திருத்துவார்கள்.

    தற்போது இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. #TeacherProtest
    Next Story
    ×