search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாலாப்பேட்டை பகுதியில் மண் பானைகள் விற்பனை சூடுபிடித்தது
    X

    லாலாப்பேட்டை பகுதியில் மண் பானைகள் விற்பனை சூடுபிடித்தது

    பொங்கல் பண்டிகை வருவதையொட்டி லாலாப்பேட்டை பகுதியில் மண்பானை விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
    லாலாபேட்டை:

    தமிழர்களின் திருநாள் பொங்கல் பண்டிகையையொட்டி அனைவரும் மண்பானையில் பொங்கல் வைத்து சமைத்து வீட்டு வாசலில் படையலிட்டு வழிபடுவது கிராமங்களில் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது. 

    இந்த நிலையில் லாலாபேட்டை பகுதியில் காவிரிக்கரையை மற்றும் குளக்கரைகளில் களிமண் எடுத்து அதனை சரியான பதத்தில் காயவைத்து பின்பு தொழிலாளர்கள் பானைகளை தயாரிக்கின்றனர். பின்னர் அனைத்தும் காயவைக்கப்பட்டு, தரத்திற்கு கேற்ப ஒரு பானை ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனையாகிறது. 

    பொங்கல் பண்டிகை வருவதையொட்டி மண்பானை விற்பனை அமோகமாக நடக்கிறது. மேலும் இது குறித்து தகவல் அறிந்து வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் வந்தும் மண்பானைகளை வாங்கி செல்கின்றனர்.
    Next Story
    ×