search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியகுளம் பகுதியில் தோட்டத்தில் மணல் பதுக்கி விற்கும் கும்பல்
    X

    பெரியகுளம் பகுதியில் தோட்டத்தில் மணல் பதுக்கி விற்கும் கும்பல்

    பெரியகுளம் பகுதியில் தோட்டத்தில் மணல் பதுக்கி விற்பது அதிகரித்து வருகிறது.

    பெரியகுளம்:

    பெரியகுளம் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் மணல் கொள்ளை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வராகநதி, சோத்துப்பாறை மற்றும் குளம், குட்டை ஆகியவற்றில் இரவு-பகலாக மணல் கடத்தல் நடந்து வருகிறது.

    போலீசார் மணல் கடத்தும் கும்பலை கைது செய்து நடவடிக்கை எடுத்தபோதும் மணல் கொள்ளையை தடுக்க முடியவில்லை.

    தற்போது மணல் திருட்டில் ஈடுபடும் கும்பல் தோட்டம், புறம்போக்குநிலம் ஆகியவற்றில் மணல் குவியலை பதுக்கி வைத்து விற்பனை செய்துவருவது அதிகரித்துள்ளது.

    பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் மணல்களை விற்பனைக்காக குவித்து வைத்துள்ளதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி பெரியகுளம் வருவாய் ஆய்வாளர் தலைமையில் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். புறம்போக்குநிலத்தில் தார்பாயை கொண்டு மூடப்பட்டு மணல் குவியல்கள் விற்பனைக்கு வைத்துள்ளது தெரியவந்தது.

    அவற்றை பறிமுதல் செய்து மணல் கடத்தும் கும்பலை தேடி வருகின்றனர். நாளுக்குநாள் அதிகரித்து வரும் மணல் கொள்ளை மற்றும் இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் கும்பல் நடமாட்டத்தால் பெரியகுளம் பகுதியில் இயற்கை வளம் குறைந்து வருவதாக சமூகஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் இவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×