search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகூர் அருகே மணல் கடத்திய 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்
    X

    பாகூர் அருகே மணல் கடத்திய 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்

    பாகூர் அருகே மணல் கடத்திய 5 மாட்டு வண்டிகளை வருவாய்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    பாகூர்:

    பாகூர் அருகே சோரியாங் குப்பம் தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து மணல் கடத்தப்படுவதாக புகார் வந்ததை அடுத்து கவர்னர் கிரண்பேடி நேற்று பாகூர் போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது மணல் கடத்தலை முற்றிலுமாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும் 2019-ம் ஆண்டில் மணல் கடத்தல் வழக்கே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று போலீசாருக்கும், அங்கிருந்த வருவாய்துறையினருக்கும் உத்தரவிட்டார்.

    இதன் அடிப்படையில் மணல் கடத்தலை தடுக்க சோரியாங்குப்பம், குருவி நத்தம், கொமந்தான்மேடு, சித்தேரி அணைக்கட்டு ஆகிய 4 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 10-க்கும் மேற்பட்ட போலீசார் மணல் கடத்தலை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் சோரியாங்குப்பம் தென் பெண்ணையாற்று பகுதியில் இன்று காலை 5 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி நிறுத்தப்பட்டு இருந்தது. இதனை வருவாய்துறையினர் கைப்பற்றி பாகூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து அவை யாருக்கு சொந்தமானது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×