search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜ.க. ஆட்சி அனைத்து அமைப்புகளையும் அழித்து விட்டது - சந்திரபாபு நாயுடு வேதனை
    X

    பா.ஜ.க. ஆட்சி அனைத்து அமைப்புகளையும் அழித்து விட்டது - சந்திரபாபு நாயுடு வேதனை

    ஜனநாயக அமைப்புகள் அனைத்தையும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஆட்சி அழித்து விட்டதாக சென்னையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளார். #institutionsdestroyed #BJPgovt #ChandrababuNaidu
    சென்னை:

    சென்னை அண்ணாஅறிவாலயத்தில் இன்று மாலை நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவை தொடர்ந்து, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்த கூட்டத்தில் பேசிய ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு,  இங்குள்ள தமிழக அரசை ரிமோட் கண்ட்ரோல் மூலம் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு இயக்கி வருகிறது. சி.பி.ஐ., ஆர்.பி.ஐ. அமலாக்கத்துறை போன்ற ஜனநாயக அமைப்புகளை எல்லாம் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு அழித்துவிட்டது. நாட்டின் கூட்டாட்சி தத்துவமும் அழிக்கப்பட்டு விட்டது என தெரிவித்தார்.

    ஊழலை ஒழிக்க வேண்டிய சி.பி.ஐ. அமைப்பு தற்போது ஊழலில் சிக்கியுள்ளது. அந்த அமைப்பின் இயக்குநர் ராஜினாமா செய்துள்ளார். ரிசர்வ் வங்கியின் கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

    இங்கு இருக்கும் தமிழக மக்களை பார்த்து நான் கேட்கிறேன். மத்தியில் தற்போதுள்ள அரசு தொடர வேண்டும் என நினைக்கிறீர்களா? இந்த ஆட்சியில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

    நாகலாந்து, தமிழகம், கேரளா, கர்நாடகா, கோவா மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் பிரச்னையை எழுப்புகிறது பாஜக அரசு. பணமதிப்பு நீக்கம் பொதுமக்களுக்கு பலன் தரவில்லை.  ரபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தவறான தகவலை தந்து சாதகமான தீர்ப்பை பெற்றுள்ளது.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றிபெறும் நிலையை தமிழக மக்கள் ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டு கொண்டார். அப்போதுதான் கலைஞரின் ஆன்மா நிம்மதியாக சாந்தியடையும் என்றும் அவர் குறிப்பிட்டார். #institutionsdestroyed #BJPgovt #ChandrababuNaidu
    Next Story
    ×