search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.99
    X

    பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.99

    சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் ரூ.72.99 ஆகவும் டீசல் விலை 8 காசுகள் குறைந்து 68.10 காசுகளாக உள்ளது. #PetrolPriceHike
    சென்னை :

    பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் ஏற்றம் கண்டது. அக்டோபர் மாதம் 17-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.10, டீசல் விலை ரூ.80.04 என உச்சத்தை தொட்டது. தொடர் விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது. இதனைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் இறங்குமுகம் காணப்பட்டது.

    ரூ.86-க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல் விலை படிப்படியாக குறைந்தது. நேற்று முன்தினம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82-க்கு விற்பனை ஆனது. 80 ரூபாயை தாண்டி விற்பனையான டீசலும் ரூ.68.26 என்ற அளவுக்கு குறைந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 11-ந்தேதி வெளியாகின.



    அதைத் தொடர்ந்து, 5 மாநில சட்டசபை தேர்தல் காரணமாகத்தான் பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்தது என்றும், இப்போது முடிவுகள் வெளியாகி விட்டதால் அவற்றின் விலை உயரக்கூடும் என்றும் பேசப்பட்டது. இதற்கு மத்தியில், சென்னை, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் நேற்று முன்தினம் 2 மாதங்களுக்கு பிறகு பெட்ரோல் விலை திடீரென உயர்ந்தது.

    இந்த நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் ரூ.72.99 ஆக விற்பனை ஆகிறது. டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் குறைந்து 68.10 காசுகளாக உள்ளது. #PetrolPriceHike 
    Next Story
    ×