search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் கண்காணிப்பு காமிராக்களால் குற்றங்கள் குறைந்துள்ளன- போலீஸ் கமி‌ஷனர்
    X

    சென்னையில் கண்காணிப்பு காமிராக்களால் குற்றங்கள் குறைந்துள்ளன- போலீஸ் கமி‌ஷனர்

    கண்காணிப்பு காமிராவில் நகரம் முழுவதும் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்ததால் சென்னை நகரில் பெருமளவு குற்றங்கள் குறைந்துள்ளதாக போலீஸ் கமிஷனர் விசுவநாதன் கூறியுள்ளார்.
    சென்னை:

    சென்னையில் குற்றங்களை தடுக்க முக்கிய சாலைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ராயபுரம் முதல் எண்ணூர் வரை 998 கண்காணிப்பு காமிராக்கள் திருவொற்றியூர் சாலை, எண்ணூர் விரைவுச்சாலை உள்ளிட்ட 11 முக்கிய சாலைகளில் பொருத்தப்பட்டு உள்ளன.

    திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் தெருவில் நடந்த நிகழ்ச்சியில் போலீஸ் கமி‌ஷனர் விசுவநாதன் இந்த கண் காணிப்பு காமிராக்களின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை மாநகரில் மூன்றாவது கண் என்ற பெயரில் கண்காணிப்பு காமிரா பொருத்துவதை ஒரு இயக்கமாக செய்து வருகிறோம்.

    இதற்கு பல்வேறு அமைப்புகளும், தனி நபர்களும் உதவி வருகின்றனர்.

    கண்காணிப்பு காமிராவில் நகரம் முழுவதும் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்ததால் சென்னை நகரில் பெருமளவு குற்றங்கள் குறைந்துள்ளன.

    குற்றங்களை குறைப்பதிலும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதிலும் இப்போது பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகள் தாங்கள் கண்காணிப்பு காமிராவில் கண்காணிக்கப்படுகிறோம். என்ற பயத்துடன் உள்ளனர்.

    கடந்த மாதங்களில் சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள் மிகவும் குறைந்துள்ளன. குற்றவாளிகளுக்கு கண்காணிப்பு காமிரா அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது.

    எண்ணூர் விரைவு சாலையில் போக்குவரத்தை சரி செய்ய உரிய கவனம் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    Next Story
    ×