search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதாவுக்கு தோல்வி ஏற்படும்- ஜிகே வாசன்
    X

    பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதாவுக்கு தோல்வி ஏற்படும்- ஜிகே வாசன்

    மக்கள் நலனில் அக்கறை செலுத்தாவிட்டால் பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதாவுக்கு தோல்வி ஏற்படும் என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். #BJP #ParliamentElection #GKVasan
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் ஆட்சி செய்த ஆட்சியாளர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப மக்கள் வாக்களித்திருப்பதாக தெரிகிறது.

    அதாவது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளின் மூலம் ஆட்சியை கைவிட்ட ஆட்சியாளர்கள் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க தவறிவிட்டனர். இது இன்னும் 6 மாதத்தில் நடைபெற இருக்கி ன்ற பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்றிருக்கின்ற மிக முக்கியமான தேர்தல்.

    இந்த தேர்தல் முடிவுகள் எதைக்காட்டுகிறது என்றால் மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சி செய்கின்ற கட்சிக்கு ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் தோல்வி என்றால் அது மக்கள் நலப் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாததும், தவறான அணுகுமுறைகளை மேற்கொண்டதற்கும், முன்னேற்பாடான நடவடிக்கைகளை எடுக்காததற்கும், வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதற்கும் கிடைத்திருக்கின்ற தோல்வியாக அமைந்திருக்கிறது.

    இது அகில இந்திய அளவிலே மத்திய அரசுக்கு ஏற்பட்ட தோல்வியாகத்தான் மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் அடிப்படையில் இனி நாட்டு மக்களுக்கு நல்லது நடந்தால் அதற்கேற்ப வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.



    மத்திய அரசு தொடர்ந்து தற்போதைய நிலையிலே இருக்குமானால், மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல், தவறான அணுகுமுறைகளையே கையாண்டால் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகள் போலவே வரும் தேர்தலிலும் மக்கள் முடிவெடுப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்துக் கிடையாது.

    மாநிலத்திலும் சரி, மத்தியிலும் சரி யார் ஆட்சி செய்தாலும் சுயநலமின்றி, பொதுநலன் கருதி மாநிலம் வளம் பெறவும், மக்கள் முன்னேற்றம் காணவும் செயல்பாடுகளை மேற்கொண்டால் தான் மக்கள் அங்கீகாரம் கொடுப்பார்கள் என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #BJP #ParliamentElection #GKVasan
    Next Story
    ×