search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பணையில் நீர்கசிவு ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டை அடுக்கப்பட்டுள்ளது.
    X
    தடுப்பணையில் நீர்கசிவு ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டை அடுக்கப்பட்டுள்ளது.

    பொன்னேரி அருகே தடுப்பணையில் நீர் கசிவு

    பொன்னேரி அடுத்த லட்சுமிரத்தில் உள்ள தடுப்பணையில் ஏற்பட்ட நீர் கசிவை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். கசிவு ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டைகள் அடுக்கி தண்ணீர் வெளியேறுவது நிறுத்தப்பட்டது.
    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த லட்சுமிபுரத்தில் தடுப்பணை உள்ளது. இங்கு தேக்கி வைக்கப்படும் தண்ணீரால் பெரும்பேடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெற்று வருகிறது.

    சமீபத்தில் பெய்த மழையால் தடுப்பணையில் ஓரளவு தண்ணீர் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

    இந்த நிலையில் தடுப்பணையின் ஒரு பகுதியில் திடீரென நீர் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    செயற்பொறியாளர் இளங்கோவன், ஆர்.டி.ஓ. (பொறுப்பு) சுரேஷ்பாபு, தாசில்தார் புகழேந்தி மற்றும் அதிகாரிகள் தடுப்பணையை பார்வையிட்டு நீர் கசிவை தடுக்க நடவடிக்கை எடுத்தனர்.

    கசிவு ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டைகள் அடுக்கி தண்ணீர் வெளியேறுவது நிறுத்தப்பட்டது. தொடர்ந்து தடுப்பணையை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். இது குறித்து பொதுப் பணித்துறை அதிகாரி முருகன் கூறும்போது, ‘தடுப்பணையில் ஏதும் ஓட்டை ஏற்படவில்லை. நீர் கசிவு மணல் மூட்டைகள் கொண்டு சரி செய்யப்பட்டு உள்ளது.

    சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பாசனத்துக்கு பயன்படக்கூடிய வகையில் தடுப்பணையில் தண்ணீர் உள்ளது. மழை தொடர்ந்தால் தடுப்பணை நிரம்பி அருகில் உள்ள ஏ.ரெட்டிபாளையம், போலாச்சியம்மன் குளம் தடுப்பணைக்கு நீர் செல்ல வாய்ப்பு உள்ளது.

    இதுபோன்ற கசிவு வழக்கமான ஒன்றுதான். இதனால் தடுப்பணைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை’ என்றார்.
    Next Story
    ×