search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சற்று நிதானமாக பேசுங்கள் - ஸ்டாலினுக்கு இல கணேசன் எச்சரிக்கை
    X

    சற்று நிதானமாக பேசுங்கள் - ஸ்டாலினுக்கு இல கணேசன் எச்சரிக்கை

    பிரதமர் மோடி தமிழகத்திற்கு வர முடியாது என கூறிய முக ஸ்டாலின் போன்றவர்கள் சற்று நிதானமாக பேச வேண்டும் என பாஜக மூத்த தலைவர் இல கணேசன் எச்சரித்துள்ளார். #BJP #IlaGanesan #DMK #MKStalin
    சென்னை:

    மேகதாதுவில் புதிய அணை கட்டுவது தொடர்பான அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் திருச்சியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, மேகதாது பிரச்சினையில் வஞ்சித்தால் பிரதமர் மோடி எந்த சூழ்நிலையிலும் தமிழகத்துக்கு வர முடியாத நிலையை ஏற்படுத்துவோம் என மிரட்டும் தொனியில் பேசினார்.



    இதற்கு பாஜக மூத்த தலைவர் இல கணேசன் பதிலடி கொடுத்துள்ளார். இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் செல்ல பிரதமர் மோடிக்கு உரிமை உண்டு, தமிழகத்திற்கும் வருவார், பிரச்சாரம் செய்வார் என இல கணேசன் தெரிவித்தார்.

    மோடி தமிழகத்திற்கு வர முடியாது என கூறும் ஸ்டாலின் போன்றோர் சற்று நிதானமாக பேச வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார். #BJP #IlaGanesan #DMK #MKStalin 
    Next Story
    ×