search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேகதாது அணை கட்ட ஒப்புதல் கொடுப்பதா?- மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    X

    மேகதாது அணை கட்ட ஒப்புதல் கொடுப்பதா?- மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    மேகதாது அணை கட்ட ஒப்புதல் கொடுத்த மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் இன்று தருமபுரி தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
    தருமபுரி:

    மேகதாது அணை கட்ட ஒப்புதல் கொடுத்த மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் இன்று தருமபுரி தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். இதில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    ஆர்ப்பாட்டத்தின்போது மாநில தலைவர் சின்னசாமி பேசியதாவது:-

    நீண்ட நெடிய சட்ட போராட்டத்துக்கு பின்பு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசின் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழக விவசாயிகளுக்கு குறிப்பாக காவிரி பாசன பகுதி விவசாயிகளுக்கு மிகவும் பாதிப்பாகும். இதனை தமிழக விவசாயிகள் வன்மையாக கண்டிக்கிறது.

    கர்நாடக அரசுக்கு வழங்கியுள்ள அனுமதியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். தமிழகத்தின் தண்ணீர் உரிமையை பாதுகாத்திட வேண்டும். மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. இதனால் தமிழகம் பாலைவனம் ஆகிவிடும். குடிக்க கூட தண்ணீர் கிடைக்காத நிலை 12 மாவட்ட மக்களுக்கு உருவாகிவிடும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×