search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்வே பாதுகாப்புபடை சார்பில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    ரெயில்வே பாதுகாப்புபடை சார்பில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

    திருப்பூர் ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
    திருப்பூர்:

    திருப்பூர் ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமை தாங்கினார். கூடுதல் சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி பேசும் போது “ ரெயிலில் ஜன்னல் ஓரம் அமர்ந்து பயணம் செய்யும் போது கழுத்தில் அணிந்துள்ள நகைகளை கொள்ளையர்கள் பறித்துச்செல்ல வாய்ப்புகள் அதிகம். எனவே கழுத்தில் உள்ள நகைகள் வெளியில் தெரியாதவாறு ஆடைகளை கொண்டு மூடிக்கொள்ள வேண்டும். எந்த பிரச்சினையாக இருந்தாலும், எவ்வித பயமும் இல்லாமல் 24 மணிநேரமும் இயங்கிக்கொண்டிருக்கும் 182 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். என்றார்.

    முடிவில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களும், போன் எண் எழுதிய அட்டைகளும் மாணவிகளுக்கு வினியோகிக்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை போலீசார் பிரஜித், சுஜேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×