search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கருத்து கூறுவதற்கு தருண் அகர்வால் குழுவுக்கு அதிகாரம் கிடையாது- அமைச்சர்
    X

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கருத்து கூறுவதற்கு தருண் அகர்வால் குழுவுக்கு அதிகாரம் கிடையாது- அமைச்சர்

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும், மூட வேண்டும் என கருத்து கூறுவதற்கு தருண் அகர்வால் குழுஹவக்கு அதிகாரம் கிடையாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். #SterlitePlant #KadamburRaju
    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு துறையில் உள்ள ஒரு அதிகாரி ஓய்வு பெறும் போது, அந்த இடத்துக்கு மற்றொரு அதிகாரியை நியமிப்பது என்பது மரபு. அந்த வகையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஓய்வு பெற்ற காரணத்தால், அபய்குமார்சிங் என்ற அதிகாரியை அரசு நியமித்தது. ஆனால் சிலை கடத்தல் வழக்கில் தொய்வு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பொன் மாணிக்கவேல் தொடர வேண்டும் என நீதிமன்றம் அறிவித்திருக்கலாம்.

    இதில் ஆட்சேபிக்க ஒன்றுமில்லை. இது நீதிமன்றத்தின் முடிவு. அரசால் அறிவிக்கப்பட்டவரும், அந்த பணியை செய்வார். அவர் விசாரித்த வழக்குகள் முடிவடையாததால், பொன் மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு மக்களின் உணர்வுகளை மதிக்கிறது. தருண் அகர்வால் குழுவுக்கு அந்த அக்கறை இல்லை. அவர்கள் வந்த காரணம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பிரச்சனை என்ன? அந்த ஆலையின் தன்மை என்ன? என்பது குறித்து மட்டும் தான் விசாரிக்க அனுப்பப்பட்டனர்.

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும், மூட வேண்டும் என கருத்து கூறுவதற்கு அவர்களுக்கு அதிகாரம் கிடையாது. அது மாநில அரசின் கையில் தான் உள்ளது. அவர்கள் தங்கள் கருத்தாக பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கையை வழங்கியுள்ளனர்.


    பசுமை தீர்ப்பாயம் என்ன நிலைப்பாட்டை எடுத்தாலும், இறுதியாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அந்த ஆலையின் உரிமம் புதுப்பித்தால் தான் ஆலை இயங்க முடியும் என்பதில் அரசு தெளிவாக உள்ளது. தவறான கருத்துகளை பரப்பிய காரணத்தால் தான் 13 உயிர்கள் பறிபோகி விட்டன. இனியும் இதுபோன்ற நிலைக்கு மக்களை தூண்டிவிட வேண்டாம். எனவே இதனை அரசியலாக்கி பார்க்க வேண்டாம்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதற்கட்டமாக தான் ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். ஒரு லட்சம் வீடுகள் மட்டும் தான் கட்டித்தரப்படும் என கூறவில்லை. மக்களின் பாதிப்புகளை கூட அரசியல் செய்கின்ற நிலை தமிழகத்தில் உள்ளது. இது ஆரோக்கியமான அரசியல் அல்ல.

    திரைத்துறையை பாதுகாப்பதற்காக திருட்டு விசிடிக்கு தனியாக சட்டம் கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு தான். அந்த சட்டம் அப்படியே நிலுவையில் உள்ளது. அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த திரைத்துறையினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஒருமித்த கருத்துடன் வந்தால், அந்த சட்டத்தை மிக வேகமாக நடைமுறைப்படுத்தி முழுமையாக திருட்டு விசிடி இல்லாத நிலையை உருவாக்க அரசு தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #SterlitePlant #KadamburRaju
    Next Story
    ×