search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகை அணையில் தண்ணீர் திறப்பு மேலும் குறைப்பு
    X

    வைகை அணையில் தண்ணீர் திறப்பு மேலும் குறைப்பு

    நீர்மட்டம் சரிந்து வருவதால் வைகை அணையில் தண்ணீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
    கூடலூர்:

    கடந்த 4 ஆண்டுகளாக மழைப்பொழிவு குறைவாக இருந்ததால் வைகை அணையின் நீர்மட்டம் உயரவில்லை. இந்த ஆண்டு பருவமழை மற்றும் கஜா புயலின் தாக்கத்தினால் பலத்த மழை பெய்தது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் 2-வது முறையாக 69 அடியை எட்டியது. ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்ட விவசாய பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 69 அடியில் இருந்து சரியத் தொடங்கிய நீர்மட்டம் தற்போது 58.86 அடியாக உள்ளது. அணைக்கு 982 கன அடி நீர் வருகிறது. நேற்று வரை 560 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று காலை முதல் அது 460 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.50 அடியாக உள்ளது. 531 கன அடிநீர் வருகிறது. 900 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.30 அடியாக உள்ளது. 54 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. 64 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    தேக்கடி 1, கூடலூர் 1.2, சண்முகாநதி அணை 1, உத்தமபாளையம் 0.6, வீரபாண்டி 4, வைகை அணை 2, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 7 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
    Next Story
    ×