search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிலை கடத்தல் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது சென்னை ஐகோர்ட்
    X

    சிலை கடத்தல் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது சென்னை ஐகோர்ட்

    சிலை கடத்தல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை பிற்பகல் தீர்ப்பு வழங்குகிறது. #IdolSmugglingCases #CBIProbe #MadrasHC #IGPonManickavel
    சென்னை:

    தமிழகத்தில் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரித்து வருகிறது. அந்த விசாரணையில் திருப்தி இல்லை என்று கூறி இந்த வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 

    அதில், தமிழகத்தில் தொடரப்பட்டுள்ள சிலைக் கடத்தல் வழக்குகளில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் சம்பந்தப்பட்டிருப்பதால் சிபிஐ விசாரிக்கும்படி தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது.
     
    இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி யானை ராஜேந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்தனர்.

    இதற்கிடையே, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

    இந்நிலையில், சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் சென்னை ஐகோர்ட் நாளை பிற்பகல் தீர்ப்பு வழங்குகிறது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், ஆதீகேசவலு அடங்கிய அமர்வு நாளை  தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது.

    சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நாளை பணிஓய்வு பெற உள்ள நிலையில் ஐகோர்ட் தீர்ப்பு வழங்குவது குறிப்பிடத்தக்கது. #IdolSmugglingCases #CBIProbe #MadrasHC #IGPonManickavel
    Next Story
    ×