search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயங்கொண்டம் அருகே வேன் கவிழ்ந்து 25 பேர் படுகாயம்
    X

    ஜெயங்கொண்டம் அருகே வேன் கவிழ்ந்து 25 பேர் படுகாயம்

    ஜெயங்கொண்டம் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 25 பேர் படுகாயம் அடைந்தனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம்குரு வாலப்பர் கோவில்தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகள் மாலதி. இவர் பெரம்பலூர் குன்னம் அருகே உள்ள கல்லை கிராமத்தில் வசித்து வருகிறார். இந் நிலையில் ரங்கநாதன் கடந்த வாரம் இறந்தார். இது தொடர்பாக நேற்று இரவு துக்க நிகழ்ச்சி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்காக மாலதி தனது உறவினர்கள் சுமார் 30 பேரை அழைத்துக் கொண்டு ஓலைப்பாடியைச் சேர்ந்த வேன் ஒன்றில் புறப்பட்டு செந்துறை வழியாக குரு வாலப்பர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். 

    அப்போது ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் - குவாகம் பிரிவு பாதை அருகே செல்லும் போது எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் வேன் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த கல்லை கிராமத்தை சேர்ந்த மாலதி கணவர் நாராயணசாமி (60), வசந்தா,கொளஞ்சி அம்மாள், ராணி,திலகவதி, ராசாயாள்,சந்திரலேகா, சுகுணா , சின்னம்மாள், சின்ன பிள்ளை , பூங்கொடி உள்ளிட்ட சுமார் 25 பேர் படுகாயமடைந்தனர். 

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த 25 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங் கொண்டம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அனைவரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×