search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை கலெக்டர் வீட்டின் முன்பு போலீஸ்காரரிடம் வாக்குவாதம் செய்த 15 பேர் மீது வழக்கு
    X

    நெல்லை கலெக்டர் வீட்டின் முன்பு போலீஸ்காரரிடம் வாக்குவாதம் செய்த 15 பேர் மீது வழக்கு

    நெல்லை கலெக்டர் வீட்டின் முன்பு நள்ளிரவில் போலீஸ்காரரிடம் வாக்குவாதம் செய்த 15 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த வக்கீல்கள் ராமசுப்பு, வேல்முருகன் உள்பட 15 பேர் நேற்று முன்தினம் இரவு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வீட்டின் முன்பு ஒரு புகார் மனு கொடுக்க போவதாக கூடி நின்றார்கள்.

    அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் நள்ளிரவு 11.30 மணி ஆகிவிட்டதால் மறுநாள் காலையில் மனு கொடுக்கு மாறு அறிவுறுத்தினார்கள். ஆனால் வக்கீல்களும், அவருடன் வந்தவர்களும் போலீசாருடன் வாக்குவாதம் செய்தார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு புளியரையில், கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    அப்போது சில லாரிகள் அபராதம் இல்லாமல் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கலெக்டரிடம் புகார் கொடுக்க போவதாக அவர்கள் கூடி அங்கு ஆர்ப்பாட்டம் செய்தனர். சம்பவ இடத்திற்கு பாளை போலீசார் விரைந்து வந்து அவர்களை சமரசம் செய்து அனுப்பினர்.

    இது குறித்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸ்காரர் சதீஸ் மோகன் பாளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், வக்கீல்கள் ராமசுப்பு, வேல்முருகன் ஆகியோர் உட்பட 15 பேர் மீது போலீஸ்காரருடன் வாக்குவாதம் செய்து அவதூறு பேசியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

    Next Story
    ×