search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் கேரட் அறுவடை செய்வதை தவிர்க்க வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்
    X

    நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் கேரட் அறுவடை செய்வதை தவிர்க்க வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்

    நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் கேரட் அறுவடை செய்வதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் பயிரிடப்படும் முக்கிய காய்கறிப் பயிரான கேரட் 2300 ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. தற்சமயம் கேரட் நள்ளிரவில் கூலி ஆட்கள் கொண்டு அறுவடை செய்யப்பட்டு காலை 6 மணியளவில் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதனால் சமூகப் பிரச்சினைகள் மற்றும் காட்டு விலங்குகள் விவசாய கூலி ஆட்களை தாக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு இனி வரும் நாட்களில் கேரட் நள்ளிரவு சமயத்தில் அறுவடை செய்வதை தவிர்த்து காலை 6 மணியளவில் அறுவடை செய்து மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு காலை 10 மணிக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்பட வேண்டும். கேரட் கொள்முதல் செய்யும் வியாபாரிகளிடம் இதன் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வியாபாரிகள் காலை 10 மணியளவில் கேரட் கொள்முதல் செய்ய வழிவகை செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் அனைத்து கேரட் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்து இம்முறையினை தவறாது கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×