search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    X

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் விளைச்சல் பாதிக்கப்பட்ட மக்காசோள பயிருடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நீலகண்டன், நிர்வாகிகள் வேணுகோபால், செல்லதுரை, வரதராஜன், புஷ்பராஜன், மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரும்பு விவசாயிகள் சங்க மநில துணை செயலாளர் ராஜேந்திரன், தமிழக ஏரி மற்றும் ஆற்றுநீர்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன் உட்பட பலர் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர்.

    இதில் அமெரிக்கன்படை புழு தாக்குதலினால் 50 சதவீதத்திற்கு மேல் விளைச்சல் பாதிக்கப்பட்ட மக்கா சோளத்திற்கு வறட்சியால் காய்ந்துபோன கரும்புக்கும் பிரதம மந்திரி வேளாண் காப்பீடு திட்டத்தின் பயிர் காப்பீடு செய்த மற்றும் பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். படைப்புழு தாக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்தவேண்டும்.

    மக்காசோளத்தில் படைப்புழு தாக்கத்தின் காரணமாக அருகில் சாகுபடி செய்துள்ள வெங்காயம், நெல், கரும்பு, பருத்தி உள்ளிட்ட பயிருக்கும், அதே படைப்புழு தாக்கம் ஏற்படாமல் ஆய்வு செய்து படைப்புழுவினால் கட்டுப்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பிரதம மந்திரி வேளாண் பயிர் காப்பீடு திட்டத்தின் கரும்புக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கும், காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கும் காய்ந்து போன கரும்பு பற்றி கணக்கு எடுத்து நஷ்ட ஈடாக ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் தமிழக அரசு இயற்கை இடர்பாடு நிதியிலிருந்து வழங்க வேண்டும் என கோ‌ஷமிட்டபடி, படைப்புழு தாக்குதால் விளைச்சல் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிருடன் சாலையில் அமர்ந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×