search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2 நாள் மழை - குடிநீர் ஏரிகளில் தண்ணீர் அதிகரிப்பு
    X

    2 நாள் மழை - குடிநீர் ஏரிகளில் தண்ணீர் அதிகரிப்பு

    வறண்டு கிடந்த 4 குடிநீர் ஏரிகளிலும் 2 நாள் மழையின் காரணமாக மொத்த குடிநீர் கையிருப்பு 4530 மில்லியன் கனஅடியாக அதிகரித்துள்ளது. #SholavaramLake #PuzhalLake
    சென்னை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.

    பூண்டி ஏரிக்கு நேற்று 139 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 169 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரி நீர் இருப்பு 373 மில்லியன் கனஅடியில் இருந்து 384 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. ஏரி சுற்று வட்டார பகுதிகளில் 24 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

    புழல் ஏரிக்கு நேற்று 160 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 196 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் 1133 மி.கன அடியில் இருந்து 1143 மி.கனஅடியாக உயர்ந்துள்ளது.

    செம்பரம்பாக்கம் பகுதியில் மழை இல்லாததால் நேற்று 179 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 41 கனஅடியாக குறைந்துவிட்டது. ஏரியில் 206 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    சோழவரம் ஏரி பகுதியில் போதிய மழை பெய்யாததால் இன்று தண்ணீர் வரத்து இல்லை. ஏரியில் 40 மி.கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    வறண்டு கிடந்த 4 குடிநீர் ஏரிகளிலும் மழையின் காரணமாக மொத்த குடிநீர் கையிருப்பு 4530 மில்லியன் கனஅடியாக அதிகரித்துள்ளது.  #SholavaramLake #PuzhalLake

    Next Story
    ×