search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலம் பகுதியில் பலத்த மழை: கோவில்-வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது
    X

    மயிலம் பகுதியில் பலத்த மழை: கோவில்-வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது

    மயிலம் மற்றும் கன்னிகாபுரம் போன்ற பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய மழை கொட்டியது. இதனால் கன்னிகாபுரத்தில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.

    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. மயிலம் மற்றும் கன்னிகாபுரம் போன்ற பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய மழை கொட்டியது.

    இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இன்று காலையும் பலத்த மழை பெய்தது.

    கன்னிகாபுரத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே வாய்க்கால் செல்கிறது. அந்த வாய்க்கால் கரையோரம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் தண்ணீர் செல்ல முடியாமல் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் கரைபுரண்டு ஓடி வயல் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    இதனால் கன்னிகா புரத்தில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள செல்வசக்தி முத்துமாரியம்மன் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் பல்வேறு தெருக்களிலும் மழைநீர் ஆறாக ஓடியது.

    Next Story
    ×