search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் மீண்டும் மழை- மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
    X

    புதுவையில் மீண்டும் மழை- மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

    புதுவையில் மழை பெய்து வருவதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    கஜா புயலையொட்டி புதுவையில் கடந்த 15-ந்தேதி முதல் மழை கொட்டியது. புயல் கரையை கடந்த 15-ந்தேதி இரவு முதல் 16-ந்தேதி காலை வரை 6.5 செ.மீ. மழை பதிவானது.

    இந்நிலையில் மீண்டும் வங்கக்கடலில் தென் கிழக்கில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது தென்மேற்கு பகுதிக்கு நகர்ந்துள்ளது. இது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறலாம் என்பதால் புதுவை, காரைக்காலில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது.

    இதன்படி புதுவையில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 12 மணிக்கு மேல் மழை கொட்டி தீர்த்தது. நேற்று இரவும் விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால் பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியது.

    இன்று காலை முதல் வானம் கருத்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான தூறலுடன் மழை பெய்து வருகிறது. இன்று மாலை கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×