search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆத்தூர் அருகே இன்று அதிகாலை தனியார் பஸ், கார் மோதல்- அர்ச்சகர் மனைவி உள்பட 2 பேர் பலி
    X

    ஆத்தூர் அருகே இன்று அதிகாலை தனியார் பஸ், கார் மோதல்- அர்ச்சகர் மனைவி உள்பட 2 பேர் பலி

    சேலம் மாவட்டம் ஆத்தூர் சந்திரகிரி பைபாஸ் சாலையில் இன்று அதிகாலை நடந்த விபத்தில் அர்ச்சகர் மனைவி உள்பட 2 பேர் பலியாகினர்.
    ஆத்தூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் நன்சை இடையாறு ராஜசுவாமி கோவிலில் அர்ச்சகராக இருப்பவர் உமாசங்கர் (வயது 27). இவரது மனைவி சுகந்தா (21). உமாசங்கரின் தம்பி கவுரிசங்கர் (27)

    இவர்கள் 3 பேரும் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த உறவினர் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்றனர். பின்னர் நேற்றிரவு சொந்த ஊருக்கு காரில் திரும்பினர். இந்த கார் இன்று அதிகாலை சேலம் மாவட்டம் ஆத்தூர் சந்திரகிரி பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது எதிரே கோவையில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் பஸ்சும், இந்த காரும் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது.காருக்குள் இருந்தவர்கள் அலறி துடித்தனர்.

    இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் காரை ஓட்டி வந்த அர்ச்சகரின் தம்பி கவுரிசங்கர், அர்ச்சரின் மனைவி சுகந்தா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அர்ச்சகர் உமாசங்கர் காயத்துடன் உயிருக்கு போராடினார்.

    தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த உமாசங்கரை மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.



    விபத்தில் பலியான 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பஸ்சின் அடியில் சிக்கியிருந்த காரை போலீசார் மீட்டனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்து தொடர்பாக அந்த பகுதியினர் கூறியதாவது:-

    விபத்து நடந்த ஆத்தூர் சந்திரகிரியில் 4 வழி சாலை என நினைத்து வாகன ஓட்டிகள் வேகமாக வருகிறார்கள். ஆனால் அந்த பகுதியில் 4 வழி சாலை திடீரென ஒரு இடத்தில் இரு வழி சாலையாக மாறுவதால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது.

    இதனால் அந்த இடத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் விபத்தில் இறந்துள்ளனர். எனவே உயிர் பலியை தடுக்க சேலம்-விழுப்புரம் சாலை முழுவதையும் 4 வழி சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். #tamilnews
    Next Story
    ×