search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலமலை வனப்பகுதியில் சுற்றுலா பயணிகளை விரட்டிய யானைகள் கூட்டம்
    X

    தலமலை வனப்பகுதியில் சுற்றுலா பயணிகளை விரட்டிய யானைகள் கூட்டம்

    தலமலை வனப்பகுதியில் யானைகள் விரட்டுவதால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்து உள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    கோவையை சேர்ந்த 6 பேர் கொண்ட இளைஞர்கள் 3 மோட்டார் சைக்கிள்களில் சுற்றுலா புறப்பட்டனர்.

    சத்தியமங்கலம் வந்த இவர்கள் மலைப்பகுதிக்கு செல்ல ஆசைப்பட்டனர். அதன்படி பண்ணாரியில் இருந்து திம்பம் மலைக்கு சென்றனர்.

    பிறகு அங்கிருந்து தலமலை வழியாக அடர்ந்த காட்டு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். தலமலை அருகே ராமரணை என்ற இடத்தில் 4 யானைகள் கூட்டம் ரோட்டில் நின்று கொண்டிருந்தது. யானைகளை கண்ட அவர்கள் அதை விரட்ட ஹாரன் அடித்தனர். இந்த சத்தம் யானைகளுக்கு கோபத்தை மூட்டியது.

    அடுத்த கனம் யானைகள் பிளிறியபடி அவர்களை விரட்டியது. இதில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 இளைஞர்கள் திரும்பி தப்பி சென்று விட்டனர்.

    இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நடு ரோட்டில் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு ஊர் பகுதிக்குள் தப்பி ஓடினர்.

    அவர்களை தொடும் தூரத்துக்கு ஒரு யானை மிக அருகே வந்து விட்டது. அப்போது ஊருக்குள் யானைகள் வராமல் இருக்க அகழி (குழி) தோண்டப்பட்டு இருந்தது. அந்த குழியில் அந்த இளைஞர்கள் 2 பேரும் தவறி விழுந்து விட்டனர்.

    குழி அருகே வந்த யானை அப்படியே நின்று விட்டது. குழிக்குள் விழுந்து கிடந்த 2 பேரையும் பார்த்து பிளிறிய படி மிரட்டி கொண்டு அந்த யானை திரும்பி காட்டுக்குள் புகுந்தது. இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக அவர்கள் யானையிடமிருந்து உயிர் தப்பினர்.

    பிறகு ஒரு வழியாக குழியில் இருந்து மேலே ஏறி வந்து மோட்டார் சைக்கிளில் ஏறி வந்த பாதை வழியாக திரும்பி சென்று விட்டனர்.

    Next Story
    ×