search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புயல் மீட்பு பணிகள் நடக்காததால் பேராவூரணி எம்எல்ஏ வீடு முற்றுகை- பொதுமக்கள் திடீர் போராட்டம்
    X

    புயல் மீட்பு பணிகள் நடக்காததால் பேராவூரணி எம்எல்ஏ வீடு முற்றுகை- பொதுமக்கள் திடீர் போராட்டம்

    புயல் மீட்பு பணிகள் நடக்காததால் பேராவூரணி எம்எல்ஏ வீட்டை பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. #Gaja #GajaCyclone
    பேராவூரணி:

    தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதி கஜா புயலால் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் கடந்த 3 நாட்களாக பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    குடிநீர் கிடைக்காமல் சமையல் செய்ய முடியாமல் பெண்கள் தவிக்கின்றனர். ஒருசில கடைகள் மட்டுமே திறக்கபட்டுள்ளன. பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள் அருகே உள்ள ஊர்களுக்கு செல்ல முடியவில்லை. இந்த சூழ்நிலையில் குடிநீர் கேன் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை ஏழைகள் வாங்க முடியாததால் குளத்து தண்ணீரை எடுத்து குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பேராவூரணி பகுதியில் சீரமைப்பு பணிகள் முடங்கி போய் உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த மனவேதனையில் உள்ளனர். இந்த நிலையில் கிராம நிர்வாக அதிகாரிகள் கலெக்டரின் அழைப்பை ஏற்று வேறு இடங்களுக்கு சென்று விட்டனர். இதனால் புயல் பாதிப்பு கணக்கெடுப்பு நடைபெறவில்லை.

    புயல் பாதிப்பில் பேராவூரணி பாதிக்கப்பட்ட இடங்களில் 3-வது இடமாக உள்ளது. அதனை கவனித்தில் கொண்டு பணிகளை மேற்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்க படாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பேராவூரணி பஸ் நிலையம் அருகே உள்ள கோவிந்தராசு எம்எல்ஏ வீட்டை இன்று காலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து கோவிந்தராசு எம்எல்ஏ நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி முத்துராஜா தலைமையில் போலீசார் எம்எல்ஏ வீட்டுக்கு பாதுகாப்பு அளித்தனர்.
    Next Story
    ×