search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணப்பாறையில் சீட்டு கட்டுபோல் சரிந்து விழுந்த செல்போன் டவர்
    X

    மணப்பாறையில் சீட்டு கட்டுபோல் சரிந்து விழுந்த செல்போன் டவர்

    கஜா புயல் காரணமாக மணப்பாறையில் நேற்று இரவு முதல் மழை பெய்ய தொடங்கியது. ஒரு வீட்டின் மாடியில் அமைக்கப்பட்டிருந்த செல்போன் டவர் சீட்டு கட்டுபோல் சரிந்து விழுந்தது. #gajacyclone #cellphonetower #heavyrain
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை, வையம்பட்டி, மருங் காபுரி ஆகிய பகுதிகளில் கஜா புயல் காரணமாக நேற்று இரவு முதல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் அது வேகம் எடுத்து கன மழையாக பெய்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் சாலையோரங்களில் இருந்த மின் கம்பங்கள், மரங்கள் ரோட்டில் சாய்ந்து விழுந்தன. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கஜா புயலின் தாக்கத்தால் 3 ஒன்றியங்களிலும் சுமார் 600-க்கும் மேற்பட்ட வீடுகளும், 400-க்கும் மேற்பட்ட கடைகள் சேதம் அடைந்தன. 3000-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. பாலக்குறிச்சி, சித்தாநத்தம் ஆகிய பஸ்நிறுத்தம் அருகே நின்ற அரசு பஸ்கள் மீது மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் 2 அரசு பஸ்கள் சேதம் அடைந்தன. 

    கஜா புயலினால் ஏற்பட்ட மழை, காற்று காரணமாக பொது மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். சாலைகள், தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டது. மழையின் தாக்கம் 11 மணிக்கு பிறகு குறைய தொடங்கியது. இதன் பின்னர் இயல்பு நிலை திரும்பியது. மணப்பாறை ராஜுவ்நகர் பகுதியில் ஒரு வீட்டின் மாடியில் தனியார் செல்போன் டவர் அமைக்கப்பட்டிருந்தது. கஜா புயல் காரணமாக அந்த டவர் இன்று காலை சீட்டு கட்டுப் போல் சரிந்து கீழே விழுந்தது. 

    திருச்சி திருவெறும்பூர் சர்க்கார்பாளையம் பகுதியில் தெருக்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் அப்பகுதி  பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். துப்பாக்கி தொழிற்சாலை குடியிருப்பு வளாகத்தில் நின்று கொண்டிருந்த காரின் மீது மரம் முறிந்து விழுந்ததால் கார் சேதமடைந்தது.

    திருச்சி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் 100-க் கும் மேற்பட்ட மரங்கள் கஜா புயலால் விழுந்துள்ளது. இதனால் மாநகராட்சியின் 4 கோட்டங்களிலும் ஊழியர் கள் சாய்ந்த மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தி வருகின்றனர். இதற்காக மாநகராட்சி லாரிகள், ஜே. சி.பி. எந்திரங்கள் மற்றும் மரம் அறுக்கும் எந்திரங்கள் ஆகியவை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

    மேலும் திருவாரூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்பு மீட்பு பணிகளுக்கு திருச்சி அரியமங்கலம், ஸ்ரீரங்கம், கோ.அபிஷேகபுரம், பொன்மலை  உள்ளிட்ட கோட்டங்களில்  இருந்து மொத்தம் 50 பேர் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வழியனுப்பி வைத்தார். தொடர்ந்து அரசு பேருந் துகள் மூலமாக சுகாதார ஆய்வாளர்கள் பரசுராமன், கணேசன் தலைமையில், சுகாதார மேற்பார்வையாளர்கள் 8 பேர் கொண்ட குழு அனுப்பப்பட்டது. மேலும் மீட்பு பணியில் ஈடுபடுத்துவ தற்காக மாநகராட்சி டிப்பர் லாரிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மரங்களை வெட்டி அகற்றுவதற்காக 20 மரம் அறுக்கும் எந்திரங்களும் ஊழியர்களுக்கு வழங்கப்பட் டுள்ளது. இவர்கள் அனை வரும் புயல் பாதிப்புகளில் இருந்து இயல்பு நிலை திரும்பும் வரை மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். கஜா புயல், மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே 100 ஆடுகள் உயிரிழந்தன. #gajacyclone #cellphonetower #heavyrain
    Next Story
    ×