search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயலின் கண்பகுதி கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்
    X

    கஜா புயலின் கண்பகுதி கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்

    கஜா புயலின் கண்பகுதி கரையை கடக்க தொடங்கி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. #GajaStorm
    சென்னை:

    கஜா புயலின் கண்பகுதி கரையை கடக்க தொடங்கி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    கஜா  புயலின் கண்பகுதி 26 கி.மீ. விட்டம் கொண்டது என வானிலை மையம் அறிவித்தது.  தீவிர புயலாகவே கஜா புயல் கடந்து வருவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. 


    கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கிய நிலையில் புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து வேகமாக காற்று வீசி வருகிறது.



    கஜா புயல் முன்னெச்சரிக்கையாக நாகை மாவட்டத்தில் 26 கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.  தஞ்சை, கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
      மேலும் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. அவற்றை அகற்றும் முயற்சியில் அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.




    புதுச்சேரி கடலோர பகுதிகளில் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருகிறது.  மேலும் புயலின் மையப் பகுதி கரையைத் தொடும்போது காற்றின் வேகம் படிப்படியாகக் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    மேலும் தற்போது காரைக்கால் பகுதி பெரிதும் பாதிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்கியல் இருக்குமாறும், வெளியே வரவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
     




    புயலின் தாக்கத்தால் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.  இந்நிலையில் நாகையில் உள்ளிட்ட பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.   நாகை வேதாரண்யத்தில் மிகுந்த பலந்த காற்று வீசி வருகிறது.  பலத்த காற்று காரணமாக தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் மறு அறிவிப்பு வரும்வரை மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  #GajaStorm
    Next Story
    ×