search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்
    X

    கஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்

    கஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. #GajaStorm
    சென்னை:

    கஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.  

    இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கரையைக் கடக்கும் போது 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும், சில சமயங்களில் 120 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.  16 கிலோ மீட்டர் வேகத்தில் கஜா புயல் நகர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  மேலும் தீவிரப் புயலாகவே கரையைக் கடக்க இருக்கிறது கஜா புயல்.  

    புயலின் தாக்கத்தால் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.  இந்நிலையில் நாகையில் உள்ளிட்ட பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.   #GajaStorm
    Next Story
    ×