search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாரமங்கலத்தில் வாலிபரை பிராந்தி பாட்டிலால் குத்திய கூலிதொழிலாளி
    X

    தாரமங்கலத்தில் வாலிபரை பிராந்தி பாட்டிலால் குத்திய கூலிதொழிலாளி

    தாரமங்கலத்தில் மது வாங்கித்தர கேட்டதால் வாலிபரை பிராந்தி பாட்டிலால் குத்திய கூலிதொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ஆரூர்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). கூலி தொழிலாளி.

    இவர் நேற்று பிராந்தி குடிப்பதற்காக தாரமங்கலம் 4 ரோடு பகுதியில் உள்ள மதுக்கடைக்கு சென்றார். அங்கு காலையில் மதுக்கடை திறந்த உடனே மது வாங்கி குடித்தார். போதை தலைக்கேறியதால் மதுக்கடை இருக்கும் வளாகப் பகுதியில் அமர்ந்திருந்தார். அப்போது மது வாங்க வருவோர், போவோரிடம் அவர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    நேற்று இரவு தாரமங்கலம் அருகே உள்ள கத்திமாறன்வளவு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி குமார்(45) என்பவர் மது குடிக்க அங்கு வந்தார். அப்போது அங்கு நின்ற மணிகண்டன் தனக்கு இலவசமாக மது வாங்கி கொடு என்று கூறி குமாரிடம் தகராறு செய்ததாக தெரிகிறது.

    இதனால் குமார் நான், மது வாங்கி குடித்து விட்டு வந்து, உன்னிடம் பேசுகிறேன் என்று கூறி விட்டு டாஸ்மாக் கடைக்கு சென்று பிராந்தி வாங்கி குடித்தார்.

    பின்னர் டாஸ்மாக் பாரில் இருந்து வெளியே வந்த அவர் நேராக மணிகண்டனிடம் என்னிடம் நீ எப்படி மது வாங்கி கேட்கலாம்? என்று கூறினார்.

    இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் போதையில் மாறி மாறி ஆபாசமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர்.

    அப்போது ஆத்திரம் அடைந்த குமார், தான் மது குடித்து விட்டு மறைத்து வைத்திருந்த காலி பிராந்தி பாட்டிலை உடைத்து மணிகண்டனின் வயிற்றில் ஓங்கி குத்தினார். இதனால் அவரது வயிற்றில் இருந்து ரத்தம் மளமளவென பீறிட்டு வெளியேறியது. இதை பார்த்த மற்ற குடிக்காரர்கள் அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

    ரத்த வெள்ளத்தில் மணிகண்டன் மது கடை வளாகத்தில் சரிந்து விழுந்தார். அவரை சிகிச்சைக்காக அழைத்து செல்ல யாரும் முன்வரவில்லை.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் தாரமங்கலம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அருள்வடிவழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய குமாரை தேடி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×