search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்லிமலையில் வீடு புகுந்து கோவில் பூசாரிக்கு அரிவாள் வெட்டு- அண்ணன், தம்பிகள் வெறிச்செயல்
    X

    கொல்லிமலையில் வீடு புகுந்து கோவில் பூசாரிக்கு அரிவாள் வெட்டு- அண்ணன், தம்பிகள் வெறிச்செயல்

    கொல்லிமலையில் முன்விரோதம் காரணமாக பூசாரிக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி, பீம நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் குப்பபோயன் (வயது 65).

    இவர், அதே ஊரில் இருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் சிவன் கோவில் பூசாரியாகவும், தர்ம கர்த்தாவாகவும் இருந்து வருகிறார்.

    இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி (50) குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    குப்பபோயன் கோவிலில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பூசாரியாக இருந்து வருவதால் அவரை மாற்றக்கோரி குப்புசாமியும் (50) இவரது தம்பிகள் ஏழுமலை(45), மணிகண்டன் (40) ஆகியோர் நாமக்கல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கின் தீர்ப்பு பூசாரி குப்பபோயனுக்கு சாதகமாக வந்தது. இதனால் குப்புசாமியும், அவரது தம்பிகளும் கடும் ஆத்திரம் அடைந்தனர்.

    தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. அவர்களை அக்கம், பக்கத்தினர் மற்றும் ஊர் மக்கள் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தனர். ஆனால், அவர்களுக்குள் முன்விரோதம் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது.

    கடும் ஆத்திரத்தில் இருந்த குப்புசாமி மற்றும் அவரது தம்பிகள் ஏழுமலை, மணிகண்டன் ஆகியோர் அரிவாளுடன் இன்று அதிகாலை 5.30 மணிக்கு குப்பபோயன் வீட்டிற்குள் புகுந்தனர்.

    அவர்களை கண்டு குப்பபோயன், அதிர்ச்சி அடைந்தார். பல முறை கூறியபிறகும் கேட்கவில்லை. இனிமேல் உன்னை விட மாட்டோம் என்றபடி குப்பபோயனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

    அவர்களிடம் இருந்து தப்பிக்க குப்பபோயன் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள் என அலறியபடி ஓடினார். ஆனால் அவரது தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டினர்.

    பின்னர் குப்புசாமியும், அவரது தம்பிகளும் ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். உயிருக்கு போராடியபடி ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உறவினர்கள், ஊர் மக்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த சம்பவம் குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான 3 பேரையும் தேடி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×