search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் குறை கூறி ஆதாயம் தேடுகின்றனர்- அமைச்சர் கேபி அன்பழகன்
    X

    புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் குறை கூறி ஆதாயம் தேடுகின்றனர்- அமைச்சர் கேபி அன்பழகன்

    விலையில்லா பொருட்கள் குறித்து புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் குறை கூறி ஆதாயம் தேடுவதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் குற்றம்சாட்டினார். #ADMK #KPAnbazhagan
    தருமபுரி:

    தருமபுரியில் இருந்து புதிதாக 4 வழித்தடங்களுக்கு பஸ் இயக்கப்பட்டன. இதனை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று தருமபுரி பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.

    கஜா புயல் காரணமாக தமிழகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே வந்த புயலின் போது தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சிறப்பாக பணியாற்றினோம்.


    மாணவி கற்பழித்து கொன்ற சம்பவத்தில் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொரு வாலிபர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்துள்ளார்.

    இந்த வழக்கில் பாரபட்சமின்றி அந்த 2 வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    மக்களின் வாழ்க்கை தரம் உயரதான் விலையில்லா பொருட்களை இந்த அரசு வழங்கி வருகின்றது. அதற்காகதான் இலவச பொருட்கள் என்பதை விலையில்லா பொருட்கள் என்று மாற்றி ஜெயலலிலதா வழங்கினார். இதனை புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் குறை கூறி ஆதாயம் தேடிவருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #KPAnbazhagan
    Next Story
    ×