search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனைத்து இடங்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும்- போலீசாருக்கு அரியலூர் எஸ்.பி.உத்தரவு
    X

    அனைத்து இடங்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும்- போலீசாருக்கு அரியலூர் எஸ்.பி.உத்தரவு

    குற்றங்களை தடுக்க அனைத்து இடங்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும் என்று போலீசாருக்கு அரியலூர் எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் எஸ்.பி. சீனிவாசன் ,ஜெயங் கொண்டம், ஆண்டிமடம் தா.பழூர், மீன்சுருட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் நிலையங்களில் கோப்புகளை ஆய்வு செய்து போலீசாரிடம் காவல் நிலையங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். 

    மேலும் ஜெயங்கொண்டம் நான்குரோடு, கடைவீதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், போக்கு வரத்தினை சீர் செய்ய நடை மேடை அமைக்க வேண்டும், போக்குவரத்தின் போது வாகனங்களை நிறுத்தி செல்ல வெள்ளை கோடுகளை புதிதாக பெயிண்டிங் செய்ய வேண்டும், குற்றங்களை குறைக்கும் வகையில் அனைத்து இடங்களிலும் அதிகப்படியான சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும், மேலும் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

     நான்கு ரோடு பகுதியில் நான்கு புறமும் வாகனங்கள் நிறுத்துவதற்கான வெள்ளை நிற எல்லைக்கோடுகளை புதுப்பிக்கவும் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு கோடிட்டு காண்பிக்கவும் வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

    ஆய்வின்போது ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராஜ் மோகன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள், மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் வேலுசாமி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
    Next Story
    ×