search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் மேலும் ஒரு குட்கா குடோன் கண்டுபிடிப்பு- 300 கிலோ பறிமுதல்
    X

    கோவையில் மேலும் ஒரு குட்கா குடோன் கண்டுபிடிப்பு- 300 கிலோ பறிமுதல்

    கோவையில் மேலும் ஒரு குட்கா குடோனை கண்டுபிடித்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 300 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். #Gutka
    கோவை:

    கோவையை அடுத்த சூலூர் கண்ணம்பாளையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குட்கா ஆலை கண்டு பிடிக்கப்பட்டது. அங்கிருந்து ரூ.80 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    அதன்பின்னர் கோவையில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவலின்பேரில் உணவு பாதுகாப்பு துறையினர் பல குடோன்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கோவை தாமஸ் வீதியை அடுத்த பொறிக்கார சந்து பகுதியில் ஒரு குடோனில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை மற்றும் அலுவலர்கள் நேற்று இரவு அந்த குடோனில் சோதனை நடத்த சென்றனர்.

    அங்கு குடோன் பூட்டப்பட்டிருந்தது. உடனே குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இன்று காலை குடோன் உரிமையாளர் வாகாராம் என்பவருக்கு தகவல் கூறி அவரை வரவழைத்து குடோனை திறந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு 300 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், குடோன் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். அப்போது வாகாராம், பறிமுதல் செய்யப்பட்ட குட்கா தன்னுடையது அல்ல, வேறு ஒருவருக்கு குடோனை வாடகைக்கு விட்டிருந்தேன் என கூறினார். இது தொடர்பாக அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #Gutka
    Next Story
    ×