search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க.வினருக்கு புதிய உறுப்பினர் அட்டை வினியோகம்
    X

    தி.மு.க.வினருக்கு புதிய உறுப்பினர் அட்டை வினியோகம்

    தி.மு.க.வினருக்கு புதிய உறுப்பினர் அட்டைகள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. #DMK

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு தி.மு.க. தயாராகி வருகிறது.

    இந்த நிலையில் தி.மு.க.வுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். இதையடுத்து மாவட்டந்தோறும் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நடந்தது.

    முன்பு இருந்ததை விட அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தீவிரமாக களம் இறங்கினர். இதையடுத்து புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.

    தி.மு.க.வினருக்கான புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் பணி கடந்த சனிக்கிழமை தொடங்கியது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல் உறுப்பினர் அட்டையை அன்பழகன் வழங்கினார். இதையடுத்து புதிய உறுப்பினர் அட்டைகள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

    மாவட்டங்களிலும் தி.மு.க. உறுப்பினர்களுக்கான புதிய அட்டைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தி.மு.க. தலைமை கழகத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் தி.மு.க. உறுப்பினர்கள் அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. #DMK

    Next Story
    ×