search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல்காந்தியை பிரதமராக ஏற்க மக்களும் எதிர்க்கட்சிகளும் தயாராக இல்லை - இல.கணேசன்
    X

    ராகுல்காந்தியை பிரதமராக ஏற்க மக்களும் எதிர்க்கட்சிகளும் தயாராக இல்லை - இல.கணேசன்

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமராக ஏற்றுக்கொள்ள மக்களும் தயாராக இல்லை. எதிர்க்கட்சிகளும் தயாராக இல்லை என்று இல.கணேசன் எம்.பி. கூறி உள்ளார். #IlaGanesan #BJP
    புதுச்சேரி:

    புதுவை முதலியார் பேட்டை தொகுதி பா.ஜனதா சார்பில் மத்திய அரசின் சாதனைகள் மற்றும் புதுவை அரசின் வேதனைகள் குறித்த பொதுக்கூட்டம் வானொலி திடல் அருகே நடந்தது.

    கூட்டத்திற்கு தொகுதி தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். நகர மாவட்ட தலைவர் மூர்த்தி, பொதுச் செயலாளர்கள் ரவி அண்ணாமலை, நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் அணி தலைவி விஜயலட்சுமி வரவேற்றார்.

    கூட்டத்தில் மேல்சபை எம்.பி. இல.கணேசன் பேசியதாவது:-

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமராக ஏற்றுக்கொள்ள மக்களும் தயாராக இல்லை. எதிர்க்கட்சிகளும் தயாராக இல்லை. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வலிய சென்று குமாரசாமிக்கு ஆதரவு தெரிவித்தது. அங்கு சிறிது முயற்சி செய்திருந்தால் பா.ஜனதா ஆட்சிக்கு வந்திருக்கும். அதனால் தான் புதுவைக்கு வந்த பிரதமர் மோடி, நாராயணசாமி மட்டுமே காங்கிரஸ் கட்சியின் கடைசி முதல்-அமைச்சராக இருப்பார் என கூறினார்.

    பிரதமர் மோடி நாள்தோறும் ஒரு திட்டத்தை அறிவித்து வருகிறார். வாஜ்பாய், மோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசு தேர்தலை மனதில் வைத்து திட்டங்களை நிறைவேற்றுவதில்லை. அடுத்த தலைமுறையை நினைத்துத்தான் திட்டங்களை நிறைவேற்றுகின்றனர்.

    தங்க நாற்கர சாலை, இலவச கியாஸ் இணைப்பு என பா.ஜனதா செய்த சாதனைகளை மக்களிடம் கூறி ஓட்டுக் கேட்கப்போகிறோம். 2022ல் இந்தியாவில் வீடில்லாதவர்களே இருக்கக் கூடாது என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அண்டை நாடான இலங்கையிலும் தமிழர்களுக்கு பா.ஜனதா ஆட்சியில் தான் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

    அரசு மானியம், மக்கள் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு நேரடியாக வங்கி கணக்கில் செலுத்துவதால் கோடிக்கணக்கான மக்கள் பணம் விரயமாவது தடுக்கப்பட்டுள்ளது. 5 நபர்கள் கொண்ட குடும்பத்திற்கு ஆளுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்கள் பயனடைவர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சங்கர், செல்வகணபதி, துணைத் தலைவர் ஏம்பலம் செல்வம், பொதுச் செயலாளர்கள் தங்கவிக்ரமன், ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணமூர்த்தி, சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். #IlaGanesan #BJP

    Next Story
    ×