search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலத்த சூறாவளி காற்று: ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
    X

    பலத்த சூறாவளி காற்று: ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

    பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    தமிழகத்தையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

    இதன் காரணமாக தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

    குறைந்த காற்றழத்த தாழ்வு நிலை காரணமாக ராமேசுவரம், பாம்மன், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. அலைகள் பனைமர உயரத்துக்கு எழும்புகின்றன.

    எனவே ராமேசுவரம், பாம்பன் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன் வளத்துறை அலுவலகத்தில் கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் இன்று வழங்கப்படவில்லை.

    மேலும் ராமேசுவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதிக காற்று காரணமாக பாம்பன் பாலத்தில் ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன.

    Next Story
    ×